2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மட்/பட்/பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்திலே கோலாகலமாக நடைபெற்றது.
இம்முறை அதிகமாக 41 மாணவர்கள் தரம் 1 இற்கான அனுமதியினைப் பெற்றிருந்தார்கள்.
கடந்த 10 வருடத்தில் மிகக் கூடியதொரு அதிகரிப்பாக காணப்படுகின்றது. இதற்காக சிறப்பாக செயற்பட்ட அதிபர், ஆசிரியர்களைப் பாராட்டுவதோடு பெற்றோர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இம் முறை மட்/பட்/பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்திலே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் தோற்றி அதில் 10 மாணவர்கள் புலமைப்பரிசிலுக்கு தகைமை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த வகையில் 50 வீதமான மாணவர்கள் புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என பாடசாலை சமூகம் தெரிவித்தனர்.