கடந்த வருடம் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இரண்டாம் கட்டமாக 250 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான நேர்முகப் பரீட்சை கடந்த 16,17,18 ம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றது. இந்நேர்முகப்பரீட்சைக்கு 1105 பட்டதாரிகள் நேர்முக பரீட்சை,பிரயோக பரீட்சை என்பவற்றுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். தற்போது வெளியிடப்பட்ட நியமனப் பட்டியலின்படி 52 சிங்கள மொழி மூலபட்டதாரிகளும் தமிழ் மொழி மூலம் 198 பேரும் ஆசிரியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து 60 பேரும் மட்டக்களப்பிலிருந்து 93 பேரும் திருமலையிலிருந்து 97 பேரும் தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது