நற்பிட்டிமுனை புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நற்பட்டிமுனையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலையத்தில்  உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிதி பங்களிப்பை கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளரான  உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர்  விசு கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கி இருந்தார்.

அதிபர் அருட்சகோதரர் தேவராஜா(தயா ) தலமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட இந் நிகழ்வில் இவ் உபகணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதில் கலந்து கொண்ட பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு  மாணவர்களின் வளர்ச்சிக்காக .பாடுபடும் .அனைத்து நல்லுள்ளங்களுக்கும்  .உதவும் பொற்கரங்கள் அமைப்பின்  சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும்  மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  .கணபதிப்பிள்ளை குணராஜா  தெரிவித்தார்