கல்முனை பற்றிமாவில் 64 பேர் சித்தி! கேஷாரஹர்ஷினி-180.
கல்முனை வலயத்தில் முதலிடம்!
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி 64 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார்கள்.
கல்லூரி அதிபர் அருட்சகோ. ரெஜினோல்ட் கூறுகையில்..
எமது பாடசாலையில் 216 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அவர்களுள் 64 மாணவர்கள் வெட்டுப் புள்ளியான 139 க்கு மேல் பெற்றுள்ளனர்.
ஆகக்கூடிய புள்ளியான 180 புள்ளிகளை மாணவி கனகராசா கேஷாரஹர்ஷினி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் கூறுகையில்..
கல்முனை வலயத்தில் அதிகூடிய சித்திகள் மற்றும் புள்ளியையும் எமது பாடசாலை மாணவர்கள் பெற்றுத் தந்துள்ளார்கள். மாணவர்கள் கற்பித்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்றார்.