கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை 25.01.2025 மாபெரும் இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நாளை காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை பாடசாலை வளாகத்தில் இடம் பெறவுள்ள இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்குமாறு கார்மேல் பற்றிமாவின் 125 ஆவது நிறைவு நிகழ்வு நிறைவேற்றுக்குழு அழைக்கின்றனர்.
125 ஆவது ஆண்டு நிறைவை கோண்டாடும் பல நிகழ்வுகள் ஒரு வருடத்திற்கு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.