(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)
திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொது சந்தை புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொதுச் சந்தைக்கான புதிய கட்டத் தொகுதி வைபவ ரீதியாக இன்று(21) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜெயந்தி வீரபத்திரன் தலைமையில் தம்பிலுவில் பொது சந்தைக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்று இருந்தது.
திருக்கோவில் பிரதேசசபையின் தம்பிலுவில் பொதுச் சந்தைக்கான புதிய கட்டடத் தொகுதியானது உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் உள்ளுர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் ஊடாக திருக்கோவில் பிரதேச சபையினால் அமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்த வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி கலந்து கொண்டு இருந்ததுடன்
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆர்.டபிள்யூ.கமலராஜன் திருக்கோவில் பிரதேச சபையின் உத்தியோகதத்ர்கள் கட்டட ஒப்பந்தக்காரர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.