பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நாளை (21,) ஒன்றிணைய அழைப்பு!
அன்பார்ந்த உறவுகளே!
🛑🛑 தமிழர் பிரதேசங்களை சீரழிக்க திட்டமிட்டு திறக்கப்படும் மதுபான சாலைகளை மூடுவதற்கு அணிதிரழ்வோம்..! 🛑🛑
🛑 இடம் : கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக.
🛑 நேரம் : நாளை 21.01.2025 காலை 9.00 மணி
எமது பெரியநீலாவணை பிரதேசத்தில் திறக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எமது ஊர் பொதுமக்களாலும் பொது அமைப்புக்களாலும் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்தும்,
குறித்த மதுசாலை உரிமையாளரின் அனுமதிப்பத்திரம் 2025 ம் ஆண்டுக்கென புதுப்பிக்கப்பட கலால் திணைக்களத்தினால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுபானசாலைகளால் சீரழிந்து வரும் எமது சமூகத்தை மேலும் வலுவிழக்க செய்யும் வகையிலான கலால் திணைக்களத்தின் செயற்பாடுகளை எதிர்த்து மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த பெரியநீலாவணை கிராமத்தின் பொது அமைப்புகள் ஏற்பாடுகளை செய்துள்ளது.
எனவே பெரியநீலாவணை மக்கள், பெரியநீலாவணையை அண்டிய பிரதேசங்களில் வாழும் கல்முனை பிராந்திய மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கிறோம்..!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் சாவு
~ சிவில் அமைப்புகள்,
பெரியநீலாவணை.