செ. டிருக்சன்

கல்முனை சேனைக்குடியிருப்பு , நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது இன்று திடீரென அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இன்று காலை இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மூடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவ்வழியே பயணம் செய்கின்ற அரச மற்றும் தனியார் அதிகாரிகள், மாணவர்கள் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் வெள்ம் மீண்டும் பரவலாக ஏற்பட்டுள்ளது.
பல வீதிகளின் குறுக்காக வெள்ள நீர் பாய்கிறது. கிட்டங்கி பாலத்தை ஊடறுத்து நீர் பாய்வதால் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக  இந்த வீதி காணப்படுவதால். பொலிஸாரால் இந்த வீதி மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.