வி.சுகிர்தகுமார்         
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வருமானம் குறைந்த மக்களின் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பிற்கான நிதி உதவியினை அரசாங்கம் வழங்கி வருகின்றது.


நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.


இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 109 பேருக்கான குடிநீர் இணைப்புக்களும் 125 பேருக்கான மின்சார இணைப்புக்களுக்குமான நிதி வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.


மின்சார இணைப்பிற்காக 45000 இற்கும் மேற்பட்ட தொகையும் குடிநீர் இணைப்பிற்காக 37000 வரையிலான நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இன்று (16) குடிநீர் இணைப்பிற்காக நிதியுதவி பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இன்று வழங்கப்பட்டதுடன் நிகழ்வில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹீசைன்டீன் அக்கரைப்பற்று குடிநீர் வழங்கல் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி றமீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு குடிநீர் மற்றும் மின்சார இணைப்பிற்கான காசோலையினை வழங்கி வைத்தனர்.