-பிரபா-
கல்முனை பெரிய நீலாவணையில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக நிகழ்வு.நாளை இடம்பெறவுள்ளது.
பெரிய நீலாவணை வைத்தியசாலையை அண்மித்ததாக அன்பே சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.
நாளை 17/ 1/ 2025 வெள்ளிகிழமை மாலை சீரடி சாய்பாபா பிரதிஷ்டை செய்யப்படும். அதனைத் தொடர்ந்து 18./1./2025 சனிகிழமை காலை 6 மணி முதல் சாய் பாபாவுக்கான பால்காப்பு நிகழ்வும், 19/ 1/ 2025 மகா கும்பாபிஷேக நிகழ்வும் இடம் பெறும்.
.இந்த மூன்று தினங்களும் பக்தர்களுக்கான அன்னதான நிகழ்வுகளையும், வறிய மக்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வும் நடைபெறுமென ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சீரடி சாய்பாபா அடியார்கள் அனைவரும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து சாய்பாபாவின் அருளை பெற்றுக் கொள்ள அனைவரையும் அழைக்கின்றனர்.பெரியநீலாவணை அன்பே சீரடி சாய்பாபா கோயில் நிருவாகத்தினர்.




