நாளை (13) திருவாதிரை 

( வி.ரி. சகாதேவராஜா)

இந்துக்கள் மார்கழி மாதத்தில் அனுஷ்டித்து வரும் திருவெம்பாவை விரதத்தின் இறுதி நாள் நாளை (13) திங்கட்கிழமை ஆகும்.

நாளை திருவாதிரை தீர்த்தம் சகல இந்து பிரதேசங்களில் இடம் பெறும்.

சில பிரதேசங்களில் சமுத்திர தீர்த்தம் இடம் பெறும்.

காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் வருடாந்த திருவெம்பாவை நிகழ்வின் இறுதிநாளாகிய திருவாதிரை தீற்தோற்சவமானது நாளை திங்கட்கிழமை காரைதீவு சமுத்திரத்தில் பல தேர்கள் சகிதம் இடம்பெறும் .