நிறைவேற்றுப் பொறியியலாளர் லிங்கேஸ்வரன்  சட்டமானி பட்டதாரியானார் 

( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டம் பெற்றுள்ளார் .

காரைதீவைச் சேர்ந்த எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் 

கடந்த வாரம் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச  ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சட்டமானிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார் .

பேராதனை பல்கலைக்கழக சிவில் பொறியியல் பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

 மேலும் பேராதனை பல்கலைக்கழகத்தில் கட்டுமானம் திட்டங்கள் மற்றும் முகாமைத்துவ துறையில் முதுமாணிப் பட்டத்தை பெறுவதற்கு கற்றுக் கொண்டிருக்கின்றார். 

காரைதீவின் சமூக செயற்பாட்டாளரான இவர் காரைதீவு விளையாட்டு கழகத்தின் முக்கிய பிரமுகராவார்.