வி.சுகிர்தகுமார்

 அரசாங்கம் நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் நலன் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
இதற்கமைவாக வருமானம் குறைந்த மிகவும் கஷ்டத்தில் வாழும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு முதியோர் தேசிய செயலகத்தின் ஊடாக தேவையான சில வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீட்டில் வாழ்வதற்கு தேவையான வசதிகளை வழங்கி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவினால் நேற்று (08) பெறுமதியான மெத்தையுடனான கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவின் முதியோர்கள் நலன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.அபுல்ஹாசிமின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கணக்காளர் க.பிரகஸ்பதி உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா கிராம நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் என்.கிருபாகரன் உள்ளிட்;ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கு மெத்தை உடனான கட்டில்கள் வழங்கப்பட்டதுடன் அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.