பொத்துவில் பகுதியில் இன்று (09)இடம்பெற்ற வீதி விபத்து மாற்றுத்திறனாளி ஒருவர் பலி!
பொத்துவில் கோமாரி பிரதான வீதியில் இன்று(09) காலை இடம் பெற்ற விபத்தில் அப்பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான W.A. மென்டிஸ் அப்பு விஜயசிறி(71) என்பவர் பலியாகி உள்ளார்.
கோமாரி பாலத்துக்கு அருகில் பல் நெடுங்காலமாக மூன்று சக்கர துவிச்சக்கர வண்டி ஒன்றில் இவர் ஜீபனோபாயத்துக்காக குடை திருத்துதல், மற்றும் செருப்பு தைப்பது, மற்றும் சில வேலைகளில் மீன் வியாபாரம் போன்ற தொழில்களை இவர் வழமையாக செய்து வந்தவர்.
எல்லோராலும் அறியப்பட்ட விஜயசிறி இன்று காலை தேநீர் அருந்துவதற்காக வீட்டில் இருந்து தனது துவிச்சக்கர வண்டியில் வீதியை கடந்து சென்ற வேளையில் பின்னால் வந்த மோட்டார் பைசைக்கிள் பயணித்த நபர் ஒருவர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.