பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், சிறிநேசன் எம்.பிக்கள் சுட்டிக்காட்டு – உரிய விசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளிப்பு

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கச் சென்ற பெண் ஒருவரும், அவரது உறவினர்களும் கடுமமையாக தாக்கப்பட்டதாகவும் இந்த விடயம் மிகவும் மோசமான செயல் எனவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இந்த அரசாங்கத்தில் தூய்மையான சிறிலங்கா எனும் திட்டங்கள் எல்லாம் நடைமுறைப்படுத்துகின்றது ஆனால், இவ்வாறான செயல்கள் இடம் பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார். இதனை உரிய முறையில் விசாரணை செய்து பாதிக்கப்பட்ட யுவதிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாடாளுமன்றில் கோடிஸ்வரன், சிறிநேசன் எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் இந்த வியம் தொடர்பாக தாம் கவனத்தில் எடுப்பதாகவும் உரிய விசாரணை மேற்கொள்ள நடடிவக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

You missed