கல்முனை றோட்டரிக் கழகத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு
( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற 40 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான மார்பகப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது .
கல்முனை றோட்டரிக் கழக தலைவர் Rtn என். ரதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
ஒவ்வொன்றும் 2000/- பெறுமதியான சத்துணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வைத்தியர் பி. மோகனகாந்தன், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சிரேஷ்ட தாதியர் திருமதி எஸ். சிவமலர் வளவாளர்களாக பங்கேற்றனர்.
கழகத்தின் செயலாளர் Rtn எம். சிவபாதசுந்தரமும் நிகழ்வில் கலந்துகொண்டார்.