கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை!! சமாரிற்றன் பேஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market (28) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டீருத்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையா காணப்பட்ட இச்சந்தையில் சுமார் 12 வருடங்களாக 30 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் மரக்கரி, அரிசி, அரிசி மா, தேன், நெய், கருவாடு போன்ற மேலும் பல உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த நிலையிலேயே இந்நாசகார செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளாந்தம் காலை 7 மணி முதல் பி.ப 2 மணி வரை வியாபார நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் குறித்த பகுதியில் மரக்கறி, பழவகை போன்ற பொருட்களை வெளியிடத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

குறித்த நாசகார செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், மனநலம் பாதிக்கப்பட்டவராக சொல்லப்படும் நபரொருவரை மட்டக்களப்பு தலைமைய பொலிசார் விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

கடந்த சில மாதங்களாக குறித்த சந்தைக்கு அருகாமையில் இருந்த பொலிஸ் காவலரணில் இருந்த பொலிசாரின் கடமை நிறுத்தப்பட்டதன் பின்னர் குறித்த பகுதியில் குற்றச் செயல்களும், போதைப்பொருள் பாவணையாளர்களின் நடமாட்டமும் அதிகரித்திருந்ததாக அப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் வெல்லாவெளி வரையான பகுதிகளில் இருந்து தமது வாழ்வாதாரத்தினை ஈட்டுவதற்காக நாளாந்தம் போக்குவரத்திற்காக அதிக செலவினை மேற்கொண்டு மட்டக்களப்பு நகரிலுள்ள மக்களுக்கு நஞ்சற்ற உணவு பொருட்களை சேவை மனப்பான்மையுடன் குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் இவர்கள் தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த வியாபாரிகளின் நன்மை கருதி பல இலட்சம் பொறுமதியான உதவிகளை மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் பிரபல வர்த்தகருமான தேசபந்து மா.செல்வராசா அவர்கள் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரிஜ் மார்க்கெட் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு – கல்லடி பிரிஜ் மார்க்கெட்டில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த முயற்சியாளர்களது மேசைகள் மற்றும் வியாபாரத்திற்காக களஞ்சியப்படுத்தியிருந்த பல இலட்சம் பெறுமதியான விற்பனைப் பொருட்கள் என்பன இனங்காணப்படாத நாச கார கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.

நாளாந்தம் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் இவ்வாறான சுய தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்ப ட்ட விபரீத நிலையினை கருத்திற் கொண்ட சமாரிற்றன் பேஸ் நிறுவனம் இவர்களுக்கு தேவைப்பாடாக இருந்த இரண்டு மேசையினையும், பாதிக்கப்பட்ட 13 வியாபாரிகளுக்கும் புதுவருட பிறப்பினை முன்னிட்டு தலா 6000/= வீதம் நிதி உதவியினையும் வழங்கி வைத்துள்ளனர்.

மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் சமாரிற்றன் பேஸ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்.ரமணதாஸ் மற்றும் அவரது பாரியார் திருமதி.ரமணதாஸ்,
மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உ.உதயகாந்த் (JP), மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசகர் ஞானப்பிரகாசம் பிரியவரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.

உதவிகளை பெற்றுக் கொண்ட குறித்த சுய தொழில் முயற்சியாளர்கள் தமக்கான உதவிகளை வழங்கிய சமாரிற்றன் பேஸ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்.ரமணதாஸ் மற்றும் அவரது பாரியாரிற்கும், மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினரிற்கும், தமது சந்தைத் தொகுதி எரியூட்டப்பட்ட போது தமக்கு பல வழிகளிலும் உதவிய மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.