சேனைக்குடியிருப்பு காமாட்சி அம்மன் ஆலய வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது :மாநகரசபை வாகனம் சீராக வருவதில்லை என மக்கள் புகார்!


. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு 01 A பிரிவில் உள்ள காமாட்சி அம்மன் வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.
  கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றும் வாகனங்கள்  இந்த வீதிக்கு சீராக வருவதில்லை என  மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


அனைத்து  பகுதிகளுக்கும்  கல்முனை மாநகரசபையின்  திண்மக்கழிவகற்றும் வாகனங்கள் சுழற்சி முறையில் சீராக செல்வதனை உறுதி செய்யுமாறு கல்முனை மாநகர சபை ஆணையாளரிடம்   மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.