திருக்கோவிலில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு

( வி.ரி.சகாதேவராஜா)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய திருக்கோவில் பிரதேச மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது நேற்று (31)  செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய மட்ட விழா கடந்த 21.12.2024ம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றமை தெரிந்ததே.

அந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் பங்கு பற்றி வெற்றிப்பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்ட அறநெறி பாடசாலை மாணவர்களை திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்   கௌரவித்தார்.

அச் சமயத்தில் இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி திருநாவுக்கரசு நாயனார் குருகுலப்பணிப்பாளர் கண இராஜரெத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.