வி.சுகிர்தகுமார்
அரச பொதுநிருவாக சுற்றுநிருபங்களின் பிரகாரம் வருடத்தின் முதல் கடமை நாள் தினத்தன்று அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(01) காலை நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியேற்றல் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இறைவணக்கம் நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதன் பின்னர் உறுதி மொழி வாசிக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.
அரச உத்தியோகத்தர்கள் என்றும் விசுவாசத்ததுடன் நாட்டின் இறைமையை பாதுகாத்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குகின்றவர்களாக கடமையாற்ற வேண்டும் எனும் கருத்து இங்கு முன்வைக்கப்பட்;டது.
இதன் பின்னராக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜனாதிபதியின் உரையும் கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித்திட்டமும் நேரடியாக பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் இதில் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.