சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கல்முனையில் கௌரவம்.

செல்லையா-பேரின்பராசா 

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் தெருவோர தொழிலாளர்களை கல்முனை மெதடிஸ்த சேகர இறைமக்கள் தமது மெதடிஸ்த தேவாலயத்திற்கு  வரவழைத்து அவர்களுக்கு மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்து கௌரவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தொண்ணூறு (90) பேருக்கு தலா ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை புத்தாண்டை முன்னிட்டு அன்பளிப்பு செய்தனர்.

கல்முனை மெதடிஸ்த சேகர முகாமைக்குரு அருட்திரு. ரவி முருகுப்பிள்ளையின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் பிரதம அதிதியாகவும் இப் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் (G.N) எஸ்.அமலதாஸ் சிறப்பு அதிதியாகவும் இலங்கை மெதடிஸ்த திருச் சபையின் முன்னாள் உப தலைவரும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் முன்னாள் அதிபருமான V.பிரபாகரன் அழைப்பு அதிதியாகவும் கலந்து கொண்டு இத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டிப் பேசினர்.

இந் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும் மேலும் இந் நிகழ்வுகளை தினேஸ் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.