கல்முனை- கொழும்பு குளிரூட்டப்பட்ட இபோச.சொகுசு பஸ்சேவை மகரகம வரை விஸ்தரிப்பு!
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையினால் முதல் முறையாக நடாத்தப்படும்
முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவை மகரகம வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று கல்முனை சாலை முகாமையாளர் வி.ஜௌபர் தெரிவித்தார்.
இந்த இருவழி பஸ் சேவை பயண விபரத்தையும் முகாமையாளர் ஜௌபர் மேலும் தெரிவித்தார்.
தினமும்
இரவு 10.30 மணிக்கு கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பமாகும் இப்புதிய சொகுசு பஸ் சேவை கட்டுநாயக்கா விமான நிலயம் சென்று
தொடர்ந்து கொழும்பு பிரதான பஸ்தரிப்பு
நிலையம் சென்று பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவல ஊடாக மகரகமவை சென்றடையும்.
அதேபோல், அங்கிருந்து கல்முனைக்கான மற்றுமொரு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இரவு 7.30 க்கு மகரகம பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ் 9.30 க்கு கொழும்பு சென்று அங்கிருந்து 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடையும்.
அங்கிருந்து புறப்படும் பஸ் மறுநாள் காலை 6 மணிக்கு கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தை வந்தடையும் என்றார்.
இந்த பஸ் வண்டியில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் பயணச்சீட்டினை
பெறுவதற்கு கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலும் மற்றும் ஒன்லைன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் .
ஒரு வழிப் பயணத்திற்கு 2398.50 ( முற்பதிவு உட்பட) அறவிடப்படும்.
மேலதிக விபரங்களுக்கு:–
0672229281
0672220438 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள் என சாலை முகாமையாளர் ஜௌபர் கேட்டுள்ளார்.