சமூக ஆர்வலரை விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் ஏற்பாட்டில் கனடாவில் கடந்த 29.12.2024 அன்று நடைபெற்ற வர்த்தக தீபம் 2024 விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விசு கணபதிப்பிள்ளை அவர்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் முன்னாள் கடற்படை உத்தியோகத்தர் மறைந்த திரு.திருமதி. சபாபதி கணபதிப்பிள்ளை (கடற்படை உத்தியோகத்தர்) பார்வதி தம்பதிகளின் புதல்வராய் 03.03.1960ல் பிறந்து தனது ஆரம்பக்கல்வியை பெரிய கல்லாறு கல்லூரியில் கற்றுதேர்ந்தார்.

கடந்த முப்பது வருடமாக கனடாவுக்கு புலம் பெயர்ந்து ஒன்றாரியோ மாகணத்தில் வசித்து வருகிறார். இலங்கையின் கிழக்கு மகாணத்தில் கட்டிட நிர்மாணிப்பு அரச ஒப்பந்தக்காரராக பணியாற்றியவர் அத்துடன் பல அரச சார்பற்ற நிறுவனங்களினால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களிலும் ஈடுபட்டவர். வின்சன் டிபோல் கந்தோலிக்க சபை கல்முனை “வை. எம். சி. ஏ” போன்றவற்றினால் செயல்படுத்தப்பட்ட புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்ட நிர்மாணிப்பு பணிகளிலும் ஆர்வமாக ஈடுபட்டவர்.

சர்வோதயம், கிராமோதய சபை போன்றவற்றிறும் பெரும்பங்காற்றியவர்.
கனடா நாட்டிலும் பல சமூக சேவைகளிலும் ஆர்வமாக ஈடுபட்டுவருவதோடு உதவும் பொற்கரங்கள் என்ற நிறுவனத்தை உருவாக்கி இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளின் மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டு உதவிகளை தொடர்ந்தும் செய்து கொண்டுவருகிறார்.

இவரின் சேவையை வியந்து பாராட்டி குறிப்பாக கனடாவின் பிரம்டன் மேயரிடமிருந்தும் ஒன்றாரியோ மாகாண அரசினாலும் உதயன் பத்திரிகையினரினாலும் சிறப்பு விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டார். விஷேடமாக எலிசபெத் மாகாராணியாரின் விருதும் இவருக்கு கிடைத்ததும் பெருமைப்படத்தக்கது.