கேஎஸ்ஸியின் வருடாந்த ஒன்று கூடலும் கழக இரவும் !

கோடீஸ்வரன் எம்பி பங்கேற்பு!

( வி.ரி.சகாதேவராஜா)

 கிழக்கின் பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டுக் கழகத்தினதும்( KSC)  விபுலானந்த சனசமூக நிலையத்தினதும் 2024ம் ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை (28) இரவு  இடம்பெற்றது.

கழகத் தலைவர் றோட்டரியன் எந்திரி வி. விஜயசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் கலந்து கொண்டார். 

சிறப்பு அதிதிகளாக கழகப்போசர்களான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், முன்னாள் பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணன்,  உத்தரவு பெற்ற நில அளவையாளர் வி.இராஜேந்திரன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி..சகாதேவராஜா ஆகியோர்  கலந்து கொண்டனர். 

விசேட அதிதிகளாக வைத்திய அதிகாரிகளான மருத்துவர் பா.சுரேஸ்குமார், மருத்துவர் க.ஹரிசானந்த், காரைதீவு பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார், சிரேஸ்ட மருந்தாளர் ப.சந்திரமோகன், மற்றும் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் லண்டனில் வசிப்பவருமான  எஸ்.ஹேமசாந் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கழகத்தின் நடப்பாண்டில் விளையாட்டுத்துறையில் பிரகாசித்த வீரர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன. மேலும் சிறப்பு கௌரவிப்புகளும் இடம்பெற்றன.

நிகழ்வில், கழக வளர்ச்சிக்காக லண்டனில் வாழும் கழக உறுப்பினரான எஸ்.ஹேமசாந்த்(UK) நேரிலே வருகைதந்து ஐம்பதாயிரம் (50000)ரூபாவை வழங்கினார்.

KSC & VCC 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

இறுதியாக புலம்பெயர் தேசத்தில் வாழும் கேஎஸ்ஸி உறுப்பினர்களின் அனுசரணையுடன் இராப்போசனமும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை டிஜேDJ இசை நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது.