கல்முனை மாநகர நூலகங்களுக்கு புதிய நூல்கள் கையளிப்பு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களுக்கு புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நூல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் இடம்பெற்றபோது மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது புதிதாக வெளி வந்துள்ள கல்வி, சமூகம், கலாசாரம், கவிதை, கலை, இலக்கியம், விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்துறை அறிவு சார்ந்த நூல்களும் ஜி.சி.ஈ. உயர்தர பரீட்சைகளின் கடந்த கால மற்றும் மாதிரி வினாப்பத்திரங்கள் அடங்கிய பெறுமதியான புதிய நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை பொது நூலகங்களுக்கான ஒவ்வொரு தொகுதி நூல்கள் அவற்றின் நூலகர்களான ஏ.எல். முஸ்தாக், ஏ.எச்.தௌபீக், ஏ.சி.ஹரீஷா, எஸ்.எம்.ஆர். அமீனுத்தீன் ஆகியோரிடம் சம்பிரதாயபூர்மாக கையளிக்கப்பட்டன.