செல்லையா-பேரின்பராசா 

 கல்முனை பிரதம தபாலகத்தில் முப்பத்தாறு வருட காலம் தபால் சேவகராக கண்ணியமான சேவையாற்றி அரச சேவையில் இருந்து இளைப்பாறிய பெரியதம்பி தவராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று 29.12.2024 கல்முனை பிரதம தபாலகத்தில் பிரதம தபாலதிபர் ஏ.அஹமட் லெப்பை தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தபால் சேவகர் தெ.ஜீவராசா தபாலக காசாளர் எஸ்.எல்.காலித் ஆகியோர் விழா நாயகனை மாலை அணிவித்து கௌரவித்ததுடன் இவரின் சிறப்பான சேவை பற்றி வியந்து பாராட்டிப் பேசினர்.இந் நிகழ்வில் விழா நாயகனின் துணைவியார் மற்றும் பிள்ளைகள் கலந்து சிறப்பித்தனர்.