பாண்டிருப்பில் ஐய்யப்பனின் 41ம்நாள் மண்டல பூசை
( வி.ரி. சகாதேவராஜா)
பாண்டிருப்பு அரசடி அம்மன் சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஐய்யப்பனின் 41ம் நாள் ஐயப்பனின் மண்டல பூசை நேற்று ( 27 ) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
காலை ஐயப்ப ஹோமம், 108 சங்காபிஷேக நிகழ்வின் பிற்பாடு மண்டல பூசை ஆரம்பமாகியது.
அதனைத்தொடர்ந்து குரு ஆசீர்வாதம், ஐயப்ப சுவாமிமார்களின் பஜனை ஆகியன நடைபெற்றன.
இந் நிகழ்வு தர்மசாஸ்தா யாத்திரிகர் பேரவையின் குருசாமி பிச்சப்பிள்ளை சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்றது.
இறுதி நிகழ்வாக விபூதிப் பிரசாதம் வழங்கப்பட்டு மதியம் மகேஸ்வர பூசை நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0057-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0030-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0041-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0020-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0055-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0039-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0049-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0013-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0021-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0073-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0011-1024x683.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0034-1024x683.jpg)