கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இன்று சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வு நினைவு இடம் பெற்றது.

இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் ( Sukunan Gunasingam ) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது சுனாமி அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய தினத்தின் நினைவாக வைத்தியசாலை வளாகத்தினுள் பணிப்பாளர் அவர்களுடன் சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரும் இணைந்து மரம் ஒன்றினை நட்டு வைத்தனர். இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.