நீங்கா வலி கொடுத்த மார்கழி 26 :சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஆண்டுகள் இருபது!
நீங்காத வலியை தந்த ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தில் இலங்கை உட்பட ஆசியாவின் சில நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தது. உயிரிழந்த உறவுகளை இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் நினைவு கூறும் வணக்க நிகழ்வுகள் இடம் பெறுகிறது.
2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 35,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.
அந்த மக்கள் அனைவரின் நினைவாக 2005 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பல பாகங்களிலும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் 26ஆம் திகதி காலை 09.25 மணி முதல் 09.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி வருடா வருடம் அரசாங்கத்தின் அறிவித்தலின் பிரகாரம் இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.