தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு
( வி.ரி. சகாதேவராஜா)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய காரைதீவு பிரதேச மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது நேற்று (23) திங்கட்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய மட்ட விழா கடந்த 21.12.2024ம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றமை தெரிந்ததே.

அந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் பங்கு பற்றி வெற்றிப்பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்ட அறநெறி பாடசாலை மாணவர்களை காரைதீவு பிரதேச செயலாளர் ஜி
அருணன்   நேற்று 23.12.2024ம் திகதி கௌரவித்தார்.

கௌரவிக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் மாணவர்கள் விபரம்.

01. குழு நிகழ்வு – நாடகம் – இரண்டாம் இடம்( தேசிய மட்டம்) ( முருகன் ஐக்கிய சங்க அறநெறிப் பாடசாலை)

*பங்கு பற்றிய மாணவர்கள்.

1. K. வர்ஷா

2. S. மதுராந்தகி

3. S. தேஜன்யா

4. D. பதுசாயினி

5. S. கம்ஷிகா

6. S. லேனுஷா

7. S. லேக்சா

8. A. கனிஷ்கா

9. S. டோஜிகா

10. P. குகதீஸ்

11. T. தினோஸ்காந்

12. N. தர்சிகா

13. N. யோஜனா

02. கட்டுரை – 1ம் இடம் – கண்ணகி அறநெறிப் பாடசாலை


ச.யகாத்மிகா – ( தரம் – 10 )

03. சித்திரம் – 1ம் இடம் – இந்து கலாசார ஒன்றிய அறநெறிப்பாடசாலை.


V. பிருஷாந் – ( தரம் – 10 )

04.பேச்சாற்றல் – 2ம் இடம் –  இந்து சமய விருத்தி சங்க அறநெறிப்பாடசாலை
இ. ஜோதிர்மயி ( தரம் – 09)

05. கதாப்பிரசங்கம் – 3ம் இடம் – இந்து கலாசார ஒன்றிய அறநெறிப்பாடசாலை.


ஜ.சதுஷிகா ( தரம் – 09 )