இன்று பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு: கல்முனை நகர லயன்ஸ் கழகம் ஏற்பாடு!
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு கல்முனை நகர லயன்ஸ் கழகம் ஒரு தொகுதி நுளம்பு வலைகளை இன்று வழங்கி வைத்தது .
கல்முனை நகர லயன்ஸ் கழகத் தலைவர் லயன். கணபதிப்பிள்ளை இதயராஜா தலைமையில் இன்று (24) செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வு இடம் பெற்றது.
லயன்ஸ் கழக வலயத் தலைவர் பொறியியலாளர் லயன் எம் .சுதர்சன் உட்பட கழக உறுப்பினர் கலந்து கொண்டார்கள்.
100 நுளம்பு வலைகளை கல்முனை நகர லயன்ஸ் கழக உறுப்பினர் சட்டத்தரணி லயன்.எஸ். சசிராஜ் ( திருக்கோவில்) அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
மேட்டுவட்டை மக்கள் இடம் பெயர்ந்து மீண்டும் தங்கள் இடங்களுக்கு செல்வதற்கு இந்த நுளம்பு வலைகள் பெரிதும் உதவியாக உள்ளது
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/1000230699.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/1000230700.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/1000230696.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/1000230695.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/1000230694.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/1000230688.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/1000230701.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/1000230686.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/12/1000230684.jpg)