பெரிய நீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு அண்மையில் சகோதரி அதிஸ்டவதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திருச்சபையின் பாடகர் குழுவினரால் நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டன.பெரியநீலாவணை அமெரிக்க மிஷன் புனித அந்திரேயா ஆலயத்தின் பொறுப்புக்குரு அருட்திரு புவியரசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறை செய்தியை வழங்கினார்.

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் சேகர முகாமைக்குரு அருட்திரு ரவி முருகுப்பிள்ளை அருட் செல்வி சுலோஜினி சகோதரர் கதிரேசன் ஆகியோரும் திருச்சபைகளின் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான நத்தார் பரிசுகள் வழங்கப்பட்டன.