நத்தார் இன்னிசை வழிபாடு 2024
கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு அண்மையில் கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் அருட்திரு ரவி முருகுப் பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஞாயிறு பாடசாலை மாணவர்கள், வாலிபர் சங்க அங்கத்தினர்கள் பெண்கள் சங்கத்தினர் ஆண்கள் சங்கத்தினரால் நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டன.
ஒப்பற்ற பரிசு கிறிஸ்துவே என்ற தலைப்பில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முன்னாள் வடக்கு திருமாவட்ட அவையின் முன்னாள் தலைவர் அருட்திரு S
D.தயாசீலன் இறை செய்தியை வழங்கினார்.
இவ்வழிபாட்டில் அருட் செல்வி சுலோஜினி சகோதரி, அதிஸ்டவதி, சகோதரர் கதிரேசன் ஆகியோரும் திருச்சபைகளின் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.