வி.சுகிர்தகுமார்
கலைஞர்.ஏஓ.அனல் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை.!
கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் கலாசார மத்திய நிலையங்களுக்கிடையே நடாத்தப்பட்டு வருகின்ற, “பிரதீபா” அகில இலங்கை சித்திர போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதன் பிரகாரம் இப்போட்டிகளில் நாடுபூராகவும் இருந்து சுமார் 200 க்கு மேற்பட்ட கலாசார மத்திய நிலையங்கள் பங்குபற்றின. அதிலும் குறிப்பாக திறந்த பிரிவில் பங்குபற்றி கிழக்கு மாகாணத்திற்கு பெரும் புகழையும், நற்பெயரையும் தேடித் தந்த கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் சித்திர பாட வளவாளரும், மட்/பட்/துறைநீலாவண மகா வித்தியாலயத்தின் ஓவிய ஆசிரியரும், தேசிய கலைஞருமான கலைஞர்.ஏஓ.அனல்(ஜீவராசா) தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கான விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது எதிர் வரும் 15 ஆம் திகதி கொழும்பு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாண போட்டியில் நிறந்த பிரிவில் பங்குபற்றி மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்ட இவர், பிரதே, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் பல விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு, 26 வருடங்களுக்கு மேலாக 5 மாகாணங்களில், 200 பாடசாலைகளுக்கு மேல் பேசும் சுவரோவியங்களை வரைந்து கலைப்பணி ஆற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது