ஐக்கிய மக்கள் கூட்டணியின்தேசியப்பட்டியல் நாடாளுமன்ற
உறுப்பினர்களாக, தமிழ்முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர்,
சுஜீவ சேனசிங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.ஐ.முத்து மொஹம்மட் ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.


கட்சியின் பொதுச் செயலாளரால் இந்த பெயர்கள்தேர்தல் ஆணைக்குழுவுக்கு
அனுப்பப்பட்டுள்ளன.இதே நேரம்,ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதி
செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலான இடைக்கால
தடையுத்தரவை கொழும்பு மாவட்டநீதிமன்றம் நேற்று காலை பிறப்பித்திருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது கட்சியுடனான உடன்பாட்டை ஐக்கிய மக்கள் கூட்டணி நிறைவேற்றவேண்டுமெனவும், அதுவரை இடைக்காலத்
தடையை விதிக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் தனது மனுவில் கேட்டிருந்தது.
அதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லாமல் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற
உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கான பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதைத் தடுத்தே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை
உத்தரவை பிறப்பித்திருந்தது.


இடைக்காலத் தடை இருக்கின்ற நிலையிலேயே, தேசியப் பட்டியல் பூர்த்தி செய்து அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இடைக்காலத் தடையை நீக்குவதற்கான மனு ஒன்றை இன்று தாக்கல் செய்வோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஒருவன் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

நன்றி – ஒருவன்