மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா!

வி.சுகிர்தகுமார்         

  மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில்  (12) நடைபெற்றது.


விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்ற தலைவருமான த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள ரத்நதயக்க மற்றும் க.கோடீஸ்வரன் ஏ.ஆதம்பாவா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.


நிகழ்வில் மாணவர்களின் பல் அம்ச கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலை கலாசார நடன நிகழ்வுகள் பன்மொழிப்பேச்சு நாடகம் போன்ற நிகழ்வுகள் பலரது பாராட்டையும் பெற்றுக்கொண்டது.


இதேநேரம் நிகழ்வுகளை ஒழுங்கு படுத்தி பயிற்சியளித்து நெறிப்படுத்திய பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பலராலும் பாராட்டப்பட்டனர்.
அத்தோடு எதிர்வரும் காலத்தில் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


அத்தோடு இன மத மொழி கடந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதற்காக அனைவரும் இணைந்து பயணிப்பதற்கு தயாராகவிருப்பதாகவும் கூறப்பட்டது.


நிகழ்வின் இறுதியில் அதிதிகளினால் மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது.