எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் எந்த நேரமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அளவில் அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது.    பொதுமக்கள் உங்களது உயிரை காத்துக் கொள்ள இந்த நோய் சம்பந்தமான விழிப்புணர்வுடன்  இருப்பது அவசியமென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இ.முரளீஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக இந்த விடையம் தொடர்பில் விவசாயிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 74 எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்க ப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்   இதில் கடந்த மாதம் நான்கு பேர் பாதிக்க ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். 

பொது மக்கள் எலிகாச்சல் நோய் சம்பந்தமாக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இந்த எலிகாச்சல் நோயானது வயல்களிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வசிப்பவர்களை இந்த நோய் பெரிதும் பாதிக்கின்றது. வயல்களில் காணப்ப டுகின்ற வெள்ள நீர் அல்லது அப்பகுதியில் காணப்படுகின்ற கிணறுகளில் கலக்கின்ற நீர் நிலைகளில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் அந்த நீர் நிலைகளை பாவிக்க வேண்டும் எனவும் அதன் மூலம் எலிக்காச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

விவசாயிகள் அந்த நீர் நிலைகளில் குளிப்பவர்கள் அதனை குடிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூடியளவு இவ்வாறான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் கொதித்தாரிய நீரை குடிக்க வேண்டும் எனவும் அப்பகுதிகளில் வயல்களில் இறங்கி வேலை செய்பவர்கள் போதிய பாதுகாப்பு அங்கிகளுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

இந்த எலிகாச்சல் நோய் சம்பந்தமான மேலதிக தகவல் தேவைப்படுபவர்கள் அண்மையில் உள்ள எமது சுகாதார அலுவலகத்தை  நாட முடியும் எனவும் வைத்தியரின் ஆலோசனையுடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.