அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்குப் பொறுப்பான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு (DCC) தலைவராக ஏ. ஆதம்பாவா எம்.பி. நியமனம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களான,
கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், நாவிதன்வெளி, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.