கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து இன்று (11) கிழக்கு மாகாண விருதுகளைப் பெறும் நால்வர்!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா 11.12.2024 இன்று திருகோணமலையில் இடம் பெறுகிறது . இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நால்வர் விருதுகளை பெறுகின்றனர்.
வித்தகர் விருது ஜெ.டேவிட் ( பைந்தமிழ் குமரன்)
வித்தகர் விருது நிர்மலா தம்பிராஜா
இளம் கலைஞர் விருது ஜெனிதா மோகன்
இளம் கலைஞர் விருது யோ.கஜேந்திரா ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.இவர்களுக்கும் விருதுகளைப் பெறும் ஏனைய பிரதேச கலைஞர்களுக்கும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.
விருது விழாவில் கவிஞர் பைந்தமிழ்ச்சுடர் நீலையூர் சுதா ( பணிப்பாளர் கிழக்கு மாகாண மீன் பிடித்திணைக்களம்) அவர்களின் முதலாவது வெளியீடான # கிடுகி வீடு# கவிதைத் தொகுப்பு நூல் 2024 ஆம் ஆண்டிற்கான சிறப்பு நூல் விருதை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
கடந்த மூன்று வருடங்களாக விருது பெறத் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் அனைவரும் அங்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவிருக்கின்றனர் .