கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வாகன விபத்து : யாசகத்தில் ஈடுபட்டுவந்த பெண் பலி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஜீப் வாகனம் மோதுண்டதில்
பெண் ஒருவர் உயிரிழந்தார்.


யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70 வயதான பெண்ணே உயிரிழந்தார் என்று
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த ஜீப் வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் மற்றும் அவரது சாரதி ஆகியோர் நேற்றுபிற்பகல் கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கொழும்பு – புத்தளம் வீதியில் போல
வத்த சந்தியில் வைத்துப் பெண் ஒருவர் ஜீப் வாகனத்தின் மீது மோதுண்டுள்ளார்.


இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தயாசகப் பெண் வென்னப்புவ வைத்திய
சாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பின் வாகன சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.