வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் கல்வி வலய விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் (08) அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.விவேகானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய அதிபர் திருமதி ஆர்.நித்தியானந்தன் உள்ளிட்டோர்; கலந்து சிறப்பித்ததுடன் விசேட கல்வி ஆசிரியர்கள், விசேட கல்வி அலகிலுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
;நிகழ்வில் திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட விசேட கல்வி அலகுகள் காணப்படும் பாடசாலைகளான அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயம் போன்றவற்றில் கல்வி பயிலும் விசேட தேவையுள்ள மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் அதிதிகளால் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் விசேட தேவையுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை முன்னெடுத்துவரும் ஆசிரியர்களும் விசேட பரிசுப்பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது.