அமரர் செல்வரெட்ணம் நவரெட்னம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவாக நிவாரண பணி.
மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்டூர் ஒல்லிமடு கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு பெரியநீலாவணையை சேர்ந்த அமரத்துவம் அடைந்த செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது மகன் சமூக செயற்பாட்டாளர் ருக்மாங்கதன்(கஜன்) அவர்களால் உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ருக்மாங்கதன் தன்னால் முடிந்த சமூகத்துக்கான தன்னார்வ செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருபவர் என்பதோடு பெரியநீலாவணை NEXT STEP சமூக அமைப்பின் உபதலைவராகவும் செயற்படுகின்றார்