பாறுக் ஷிஹான்
வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி வீதியின் மருங்கில் தற்போது தடுப்பு சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
குறித்த தூண்கள் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரம் விபத்திற்குள்ளாகி விடுமுறைக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்ற வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இன்று விரைவாக குறித்த தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு பூரணப்படுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உட்பட ஏனைய தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் எதிர்காலத்தில் இப்பகுதியில் ஏற்படும் வெள்ள நிலையின் அளவீட்டை இலகுவாக கணீப்பீடு செய்வதற்காகவும் அவ்வழியாக பயணம் செய்யும் பொதுமக்கள் வாகனங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் இத்தூண்கள் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 6 அடிக்கும் அதிகமான அளவீட்டுடன் இத்துண்கள் கொங்கிறீட் கற்களை கொண்டு தடுப்புச்சுவர் போன்று அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.இதே வேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.














