வி.சுகிர்தகுமார்        

 உலக தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில்,  திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களின் சித்திரக் கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும் 07 (சனிக்கிழமை)  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் R. முரளீஸ்வரன் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் Dr.சதுர்முகம் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கலந்து சிறப்பித்ததோடு, சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் திருமதி ஷாமினி ரவிராஜ், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் (அழகியல்), மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மட்டக்களப்பு பிராந்திய வாய்ச் சுகாதார பிரிவினரின் ஏற்பாட்டில் வாய்ப்புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைளில் ஒன்றாக இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் போட்டியில் மாவட்ட மட்டத்தில்  துறைநீலாவணை மகாவித்தியால மாணவர்கள் 10 பேர் தெரிவு செய்யப்பட்டமை.குறிப்பிடத்தக்கது