பெரியநீலாவணையில் ADVRO வினால் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு.
அம்பாறை மாவட்ட விபுலானந்தா புணர்வாழ்வு அமைப்பு,(ADVRO) ஈழத் தமிழர் வர்த்தக சங்கத்தின் அனுசரணையோடு பெரிய நீலாவணையில் மழை, வெள்ளம் காரணங்களால் நெருக்கடியை சந்தித்த சில குடும்பங்களுக்கு ரூபா நான்காயிரம் (4000) பெறுமதியான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் தலைவர் திரு.ந.சௌவியதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வு அமைப்பின் தலைவர்(ADVRO) ஒய்வு நிலை அதிபர் திரு. க. சந்திரலிங்கம், நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் பிரதான ஆலோசகரும், அம்பாறை மாவட்ட விவேகானந்த புணர்வாழ்வு அமைப்பின் செயலாளரும் ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளருமான திரு. கண. வரதராஜன் (ஜே பி) , அமைப்பின் உப தலைவர், மற்றும் இளைஞர் அணி தலைவர், நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் செயலாளர் திரு. வி. கார்த்திக், பொருளாளர் திரு கு. கஜேந்திரராஜ் ஆகியோரும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
பெரிய நீலாவணையில் உள்ள நான்கு கிராமசேவகர் பிரிவுகளிலும் இருந்து நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு 4000 ரூபாய் பெறுமதியான 100000 ரூபா பெறுமதியான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது