நாடாளுமன்றத்தின் நாளைய (04.12.2024) அமர்வை இரவு 9.30 மணிவரை நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நாளை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த விடயத்தை நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

10ஆவது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு சபாநாயகர் அசோக சபுமல் ரங்வல்ல தலைமையில் இன்று இடம் பெற்றது.