அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு!
அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் மாவட்டத்தின் பல கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் தலைமையில் பிரித்தானியா அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு கழகத்தின் அனுசரணையில் காரைதீவு ,சேனைக்குடியிருப்பு, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி போன்ற இடங்களில் நிவாணரப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். . மேலும் இப்பணி ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, வாசிக்குடா, சேனைக்குடியிருப்பு , பெரியநீலாவணை போன்ற இடங்களுக்கும் தொடரும் என தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பின் தலைவர் .கா. சந்திரலிங்கம் ,செயலாளர் க. வரதராஜன், பொருளாளர் மா.வித்தியானந்தன், உபதலைவர் தே. சர்வானந்தன், இயக்குனர் சபை உறுப்பினர்கள் துரைராசசிங்கம்.,ச.நிதீசன், சி.ஹம்சன்.,கு. திருச்செல்வம். ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






