கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் திறந்து வைப்பு!
நத்தார் மாதத்தை முன்னிட்டு கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் நேற்று முதலாம் திகதி முதலாம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை மெதடிஸ்த திருச்சபை தேவாலய வளாகத்தில் மக்கள் பார்வைக்காக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான இந்த நத்தார் மரம் பலரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.
இதில் கல்முனை மெதடித்த திருச்சபையின் முகாமை குரு : அருட்திரு. S. ரவி முருகுபிள்ளை, கல்முனை மெதடித்த திருச்சபையின் சிறுமியர் இல்ல பொறுப்பாளர் அருட் செல்வி A. சுலோஜினி, கல்முனை உயஸ்லி உயர்தர பாடசாலையின் அதிபர் Mr. S. கலையரசன், துறை நீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் அருட் சகோதரர். V. கதிரேசன், கல்முனை பரலோக வாசல் திருச்சபையின் போதகர் அருட்திரு. கிருபை ராஜா, மற்றும் திருச்சபையின் உக்கிரான காரர்கள் சபை மக்கள் கல்முனை பிரதேசத்தின் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.