வி.சுகிர்தகுமார்        

 அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டைக்கிராமத்தில் அதிகரித்து வரும் காட்டு யானையின் அட்டகாசம் காரணமாக இந்த வாரத்தினுள்ள அப்பகுதியில் ஒருவர் பலத்த  காயமடைந்துள்ளதுடன் பல உடமைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.
 நேற்று முன்தினம் (30) நள்ளிரவு ரொட்டைக்கிராமத்தில் உட்புகுந்த யானை ஒன்று ஒருவரின் குடியிருப்பினுள் புகுந்ததுடன் குடியிருப்பின் சுற்று மதில்லை தாக்கி சேதமாகியது.
இந்நிலையில் அங்கிருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இந்நிலையில் யானையின் அச்சுறுத்தல் நீடித்துவரும் நிலையில் தமது ; நிலை என்னாவது என கிராம வாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இக்கிராமத்தில்  வாழ்கின்ற மக்கள் மீன் பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள். அவ்வாறு இருக்கையில் யானை தாக்குதலினால் அச்சம் கொண்டுள்ளதுடன்; தொடர்ந்தும் தமது வாழ்வாதாரத்தினை மேற்கொள்ள இயலாத சூழ் நிலை நிலவி வருவதாக கவலை தெரிவித்தனர்.
இதனை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து தமக்கான தீர்வினை பெற்று தரும் படி இப்பிரதேச வாசிகள் கேட்டுக்கொள்கின்றனர்….
அத்தோடு இப்பகுதியில் முறையான வீதி மற்றும்  வீதிமின்விளக்கு இல்லாமையும் பெரிய சவாலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது….