காரைதீவில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளையால் உலருணவு
( வி.ரி.சகாதேவராஜா)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி காரைதீவு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளை எனும் அமைப்பு உலருணவு நிவாரணங்களை இன்று (1) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தது.
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வந்த கனமழையினால் பாதிக்கப்பட்ட காரைதீவுக் கிராமத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களுக்கு இவ் உலர் உணவுப்பொதிகள் காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் வைத்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது இராமகிருஷ்ண மிஷன் சுவாமி நடராஜானந்தா தீயின் 121 வது ஜனன தினத்தையொட்டி இடம்பெற்றது.
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்க தலைவர் செ.மணிமாறன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, கண்ணகி அம்மன் ஆலய தர்மகர்த்தா இ.குணசிங்கம், சித்தானைக்குட்டி ஆலய தர்மகத்தா சி.நந்தேஸ்வரன் ஆகியோர் உரையாற்றி இப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
மணிமண்டப செயலாளர் கு.ஜெயராஜி இணைப்பாளராக இருந்து செயற்பட்டார்.
மார்க்கண்டு அறக்கட்டளையின் பிரதிநிதிகளான மா.சிதம்பரநாதன், மா.வித்தியானந்தன் முன்னிலையில் ஏனைய ஆலய தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் சுவாமிகளின் உறவுகளும் சமூகமளித்திருந்தனர்.










